காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம்
காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நொய்யல்,
நொய்யல் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத்துறை சார்பில் காச நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் சுகாதார கல்வியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார செவிலியர் சரஸ்வதி, சுகாதார தன்னார்வலர் சுவாதி ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டு, காச நோயை அறவே ஒழித்து காசநோய் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும். இந்திய குடிமக்களாகிய நாம் ஒன்றிணைந்து காச நோயை விரட்ட பாடுபட வேண்டும். இருமும்போது நெஞ்சு வலி வருதல், மூச்சுத்திணறல் ஆகியவை தென்பட்டால் அவர்களுக்கு காசநோய் பற்றி எடுத்துச் சொல்லி அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது மாவட்ட காசநோய் மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். காச நோயை கண்டறியும் சிபினாட் என்னும் நவீன சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே இலவசமாக பார்க்கப்படுகிறது. சிகிச்சையில் இருக்கும்போது சத்தான உணவு உண்பதற்காக மாதம் ரூ.500 அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
மற்ற நோயைப்போல காசநோயும் கிருமியால் வரக்கூடிய ஒரு நோய்தான் என்பதால் காசநோய்களை துச்சமாக எண்ண கூடாது. அதேபோல் மற்றவர்களை இதுபோன்று என்ன விடக்கூடாது. காசநோயாளிகளை ஒதுக்கி வைக்கக் கூடாது. அவர்களை அரவணைத்து ஆறுதல் கூற வேண்டும். காசநோய் ஒழிப்பில் அனைவரும் தங்களால் இயன்ற அனைத்து அணுகு முறைகளையும் மேற்கொண்டு காச நோய்களை முற்றிலும் அளித்திடவும், காசநோய் இல்லாத தமிழகம் 2025 என்ற இலக்கினை அடைய அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார். இதில், ெபாதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.