மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தோகைமலை,
தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 9-ந்தேதி வட்டார வள மையத்தின் சார்பாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதையொட்டி தோகைமலையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் முகாம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி, தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கந்தவேல், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்