வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
சங்கராபுரம் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது;
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே காட்டுவன்னஞ்சூரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை இவர் புதிதாக கட்டிவரும் வீட்டுக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சக்திவேல் தலைமையிலான வீரர்கள் சென்று அந்த பாம்பை பிடித்து பாதுகாப்பாக அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.