தூக்குப்போட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை
கரூரில் வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை கொண்டார்.
கரூர்
பட்டதாரி வாலிபர்
கரூர் வஞ்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகன் கவியரசு (வயது 22). பி.காம். பட்டதாரி. இவர் கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் வேலை ஏதும் கிடைக்காததால் கவியரசு கடந்த சில மாதங்களாக விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட கவியரசு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் கவியரசை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து கவியரசு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை கிடக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.