கே.வி.குப்பத்தில் மூதாட்டி நடத்தி வந்த இட்லி கடை எரிந்து சாம்பல்
கே.வி.குப்பத்தில் மூதாட்டி நடத்தி வந்த இட்லி கடை எரிந்து சாம்பலானது.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த சேகரின் மனைவி சரசா (வயது 70). இவர் சந்தைமேடு பகுதியில் தென்னங்கீற்று குடிசை அமைத்து, தினமும் இட்லி கடை நடத்தி வந்தார். மாலை 4 மணியளவில் இட்லி கடை திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். அதற்குள் குடிசைக்குள் இருந்த துணிமணிகள், பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.