சாலை விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு

சாலை விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-04-03 17:20 GMT
கரூர்
கிருஷ்ணராயபுரம்
லாலாபேட்டை அருகே உள்ள கோனிச்சிபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 37). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சேங்கலில் இருந்து  நல்லமுத்து பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது முத்தம்பட்டி மேற்கு களம் அருகே சென்றபோது அதே பகுதியில் நின்று கொண்டிருந்த முருகேசன் என்பவரது மோட்டார் சைக்கிள் மீது, மாரியப்பன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. 
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்