மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-03 17:18 GMT
கரூர்
குளித்தலை, 
குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி மற்றும் வாளாந்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தண்ணீர்பள்ளி பகுதிக்கு சென்ற போலீசார் தனது வீட்டின் அருகே வைத்து மது விற்ற பொன்னர் (வயது 52) என்பவரை கைது செய்தனர். அதேபோல வாளாந்தூர் பகுதியில் தனது வீட்டின் அருகே வைத்து மது விற்ற ராஜ்குமார் (45) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்