பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சின்னசேலம் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-04-03 17:10 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் பஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மேற்பார்வையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் பஸ்சுக்காக காத்திருக்கும்போது பொதுமக்கள் தங்கள் உடமைகளை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது பற்றி போலீசார் விளக்கி கூறினர். தொடர்ந்து சிலர் உதவி செய்வது போல் நடித்து கவனத்தை திசை திருப்பி செல்போன், நகைகள் உள்ளிட்டவற்றை திருடி சென்றுவிடுவார்கள். எனவே பொதுமக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன், அதே நேரத்தில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சந்தேகப்படும்படி யாரேனும் சுற்றித்திரிந்தால் அவர்கள் பற்றிய தகவலை உடனே தெரிவிக்க வேண்டும் என போலீசார் அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், மணிகண்டன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடை வீதி, சந்தை உள்ளிட்ட இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

மேலும் செய்திகள்