கல்வராயன்மலையில் துப்புரவு பணி
வனத்துறை சார்பில் கல்வராயன்மலையில் துப்புரவு பணி நடைபெற்றது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலை பரிகம் காப்புக்காடு எல்லை மற்றும் கோமுகி அணை வியூ பாயிண்ட் பகுதியில் வனத்துறை சார்பில் துப்புரவு பணி நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி வனச்சரகர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் வனத்துறையினருடன் தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ஆங்காங்கே கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளி அகற்றினர். மேலும் மதுபிரியர்கள் வீசிச்சென்ற காலி மதுபாட்டில்களையும் அகற்றினர். இந்த நிகழ்ச்சியில் கச்சிராப்பாளையம் வனவர் செல்லதுரை, பரிகம் வன பாதுகாவலர் அக்ஷயாசாமி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.