பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-03 16:54 GMT
நெய்வேலி

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்யகோரியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே நெய்வேலி நகர மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கம்,  இந்திராநகர் காங்கிரஸ் கமிட்டி ஆகியன சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நெய்வேலி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ரவிக்குமார், நகர பொது செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது மோட்டார் சைக்கிள்கள்கள் மற்றும் கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து வைத்திருந்தனர்.

இதில் ஐ.என்.டி.யூ.சி. சிறப்பு தலைவர் சுகுமார், அணி தலைவர் குமார், எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராமலிங்கம், மாவட்ட துணை தலைவர் சிவாஜி மரிய அந்துவான், நகர துணை தலைவர்கள் கரிகாலன், சக்திவேல், இளைஞர் சங்க நிர்வாகிகள் அனீஸ், ரோசாரியோ, முருகன், அரவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்