நெமிலி அருகே திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி

நெமிலி அருகே திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-04-03 16:52 GMT
நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலிைய அடுத்த கீழ்வீதி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் கடந்த 2 வாரங்களாக மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் பகலில் மகாபாரத சொற்பொழிவும், இரவில் கிருஷ்ணன் தூது, குறவஞ்சி, பாஞ்சாலி சபதம், அர்ச்சுனன் தபசு, அறவான் கடபலி உள்ளிட்ட கட்டைக்கூத்து நாடகங்கள் நடந்தன. அதில் அர்ச்சுனன் சிவபெருமானிடம் பாசுபதம் என்னும் அஸ்திரம் பெற வேண்டி ஒற்றைக்காலில் தவம் இருக்கும் நிகழ்ச்சியை குறிக்கும் வகையில்"அர்ச்சுனன் தபசு" என்னும் மாகாபாரத சிறப்பு நிகழ்ச்சி கடந்த மார்ச் 29-ந் தேதி நடந்தது.
 
மகாபாரத சொற்பொழிவின் இறுதி நிகழ்ச்சியாக துரியோதனன் படுகளம் நடந்தது. மாலை தீமிதி திருவிழா நடந்தது. அதில் நெமிலி, கோடம்பாக்கம், பெரப்பேரி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்