சீர்காழியில் புதிய தாலுகா அலுவலகம் கட்ட கோரிக்கை
சீர்காழியில் புதிய தாலுகா அலுவலகம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது
சீர்காழி
சீர்காழியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சீர்காழி சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாதரகுடி காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின், நகர செயலாளர் இனியதமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி சட்டமன்ற தொகுதி செயலாளர் தாமு இனியவன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநில வர்த்தகர் அணி செயலாளர் விஜயரெங்கன் ஆகியோர் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தரும் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு மாவட்ட எல்லையான கொள்ளிடம் பாலத்தில் சிறப்பான வரவேற்பு அளிப்பது. சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க அரசை கேட்டுக் கொள்வது. சீர்காழி பகுதியில் உள்ள பாசன வாய்க்கால், வடிவாய்க்கால், குளங்கள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார கேட்டுக்கொள்வது. நீண்டகாலமாக பாலம் கட்டப்பட்டு இணைப்புச் சாலை அமைக்கப்படாமல் உள்ள திருமுல்லைவாசல் உப்பனாற்றில் இருபுறமும் இணைப்புச் சாலை அமைக்க கேட்டுக் கொள்வது. அடிப்படை வசதி இல்லாமல் செயல்படும் சீர்காழி தாசில்தார் அலுவலகத்திற்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட வேண்டும். சீர்காழி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டித்தர கேட்டுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.