அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஒப்பந்த சுகாதார துப்புரவு பணியாளர்கள் சங்க கூட்டம்

விழுப்புரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஒப்பந்த சுகாதார துப்புரவு பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-03 16:30 GMT
விழுப்புரம், 

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஒப்பந்த சுகாதார துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மணிமேகலை தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் நிலாஒளி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். 

இதில் நிர்வாகிகள் செல்லம்மாள், நதியா, பரிமளா, ராதிகா, விஜயராணி, செங்கேணி, புஷ்பா உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வார விடுப்பு, 8 மணி நேர வேலை, அரசு விடுமுறைகள், பணி பாதுகாப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்