பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கரூர் எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளனர்.
வேடசந்தூர்:
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூரில் கரூர் எம்.பி. ஜோதிமணி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுடன் தரையில் அமர்ந்து குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
பின்னர் ஜோதிமணி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதே பா.ஜ.க. அரசின் தினசரி வேலையாக மாறிவிட்டது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, விவசாய தொழில்கள் வீழ்ச்சி, தொழில்கள் நசிவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் ஏழை-எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றார்.
இந்த பேட்டியின்போது காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜம்மாள், மாவட்ட துணைத்தலைவர் ரெங்கமலை, செயலாளர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.