தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-03 15:33 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அரசு பஸ்சை முறையாக இயக்க வேண்டும்
பழனியில் இருந்து வத்தக்கவுண்டன்வலசு பகுதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தினமும் 5 முறை அரசு பஸ் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு பஸ்சை முறையாக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரசாந்த், வத்தக்கவுண்டன்வலசு.
தாமதமாகும் ரெயில்வே மேம்பால பணி
திண்டுக்கல்லில், கரூர் ரோட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த பணிகள் நிறைவடையாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மேம்பால பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
சேதமடைந்த சாலை
ஆத்தூர் தாலுகா தொப்பம்பட்டியில் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.
-மணிகண்டன், தொப்பம்பட்டி.
பக்தர்கள் அவதி
பழனி கிரிவீதியில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த வழியாக கிரிவலம் செல்லும் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கிரிவீதியில் பக்தர்களுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீதர், பழனி.

மேலும் செய்திகள்