குடியாத்தத்தில் 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
குடியாத்தத்தில் 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம்
குடியாத்தம்-சித்தூர் கேட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் சித்தூர் கேட் பகுதியில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. 25 கிலோ எடையில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்பாஷா (வயது 59), ஷாஜித் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.