கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி

செய்யாறு பாரத ஸ்டே்ட வங்கி கிளையில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-04-03 14:10 GMT
செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பாரத ஸ்டே்ட வங்கி கிளையின் முதன்மை மேலாளர் பாலாஜி தலைமை தாங்கி, செய்யாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் 42 பேருக்கு ரூ.10 லட்சமும், 5 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.43 லட்சமும் வழங்கினார். 

இதில் வங்கி மேலாளர்கள் சம்பத்குமார், ராஜசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்