தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்ட பணிக்கான அடையாள அட்டை
தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்ட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
வாணியம்பாடி
நாட்றம்பள்ளி ஒன்றியம் எக்லாசபுரம் ஊராட்சியில் 2022-2023ம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டப்பணிக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வி.கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பாரதிசேட்டு பங்கேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டப்பணிக்கான அடையாள அட்டைைய வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.