பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மோடியின் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மோடியின் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கருமத்தம்பட்டி
பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மோடியின் மத்திய அரசை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கருமத்தம்பட்டி நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் திரும்ப பெறு, திரும்ப பெறு, பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறு என்பது உள்பட மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.