தூத்துக்குடியில் இந்துமுன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் இந்துமுன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துகுமார் தலைமை தாங்கினார். சரவணகுமார், ராகவேந்திரா, பலவேசம், சிவலிங்கம், மாரியப்பன், வினோத், சிபு, சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் குற்றாலநாதன் பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பால்ராஜ், செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ், சேவாபாரதி வெண்ணிமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி பகுதியில் இந்து மத கோவில்கள் ஒருதலைபட்சமாக இடிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மண்டல பொறுப்பாளர்கள், கோவில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நாராயணன் ராஜ் நன்றி கூறினார்.