தாளவாடியில் சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை- தூக்கி வீசப்பட்ட மாட்டு கொட்டகை
தாளவாடியில் சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் மாட்டு கொட்டகை தூக்கி வீசப்பட்டது.
தாளவாடி
தாளவாடியில் சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் மாட்டு கொட்டகை தூக்கி வீசப்பட்டது.
ஆலங்கட்டி மழை
தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் பகல் 2 மணி வரை கடுமையான வெயில் வாட்டி வந்தது.
இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்தது. அதைத்தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
மாட்டு கொட்டகை சேதம்
இதேபோல் தாளவாடி, இரியபுரம், தொட்டகாஜனூர், ஓசூர், தர்மாபுரம், சூசைபுரம், ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. ஜீர்கள்ளி கிராமத்தில் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் குமார் என்பவரின் மாட்டு கொட்டகை தூக்கி வீசப்பட்டது.
இதில் மாட்டு கொட்டகை சேதமடைந்தது. தொடர்ந்து கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்துவருவதால் தாளவாடி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.