எடப்பாடி அருகே மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி

எடப்பாடி அருகே மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியானார்கள்.

Update: 2022-04-02 20:55 GMT
எடப்பாடி, 
மின்சாரம் தாக்கி...
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி அருகே இருப்பாளி மேல் அக்கரைப்பட்டி பகுதியில் மாதேஸ்வரன் (வயது 60) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வீட்டின் மேற்கூரை தகரத்தால் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மாதேஸ்வரனின் கூரை வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்வதற்கு, அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்திக் (26) மற்றும் ஆடையூர் தாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் நவீன்ராஜா (24) ஆகியோர் நேற்று காலையில் வந்தனர். 
அங்கு அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவர்கள் இருவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் நவீன் ராஜாவுக்கு நெஞ்சுப்பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்டும், கார்த்திக்கு காயங்கள் ஏதும் ஏற்படாமல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். 
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த பூலாம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், நவீன் ராஜா மற்றும் கார்த்திக் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக எலக்ட்ரீசியன் வேலை செய்து வருவதாகவும், இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை எனவும் தெரியவந்தது. 
இந்த சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்