மது விற்ற 2 பேர் கைது

நாகர்கோவிலில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-04-02 20:52 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பட்டகசாலியன்விளையில் மது விற்றதாக வட்டவிளையை சேர்ந்த சிவகுமார் (46) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மது விற்பனையில் ஈடுபட்டதாக நேற்று மட்டும் 15 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்