ராமநாதபுரத்ைத சேர்ந்தவரிடம் ரூ.5 லட்சம் மோசடி
தங்க பிஸ்கெட் வாங்கி தருவதாக கூறி ராமநாதபுரத்தை சேர்ந்தவரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது. போலீஸ் போல நடித்து ஏமாற்றியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
உசிலம்பட்டி,
தங்க பிஸ்கெட் வாங்கி தருவதாக கூறி ராமநாதபுரத்தை சேர்ந்தவரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது. போலீஸ் போல நடித்து ஏமாற்றியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தங்க பிஸ்கெட் வாங்கி தருவதாக..
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தைச்சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இருவரும் நண்பர்கள்.
இந்த நிலையில் சங்கரலிங்கம், சண்முகத்திடம் உசிலம்பட்டி பகுதியில் குறைந்த விலையில் தங்க பிஸ்கெட் வாங்கித் தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சண்முகம் 5 லட்சம் ரூபாயுடன் உசிலம்பட்டிக்கு வந்துள்ளார். அங்கு தங்க பிஸ்ெகட் வாங்குவது குறித்து பேரம் பேசிக் கொண்டிருந்த பொழுது சில மர்ம நபர்கள் தாங்கள் போலீசார் என்று கூறிக்கொண்டு அவர்களை மிரட்டி ரூ.5 லட்சத்தை கைப்பற்றினர். பின்னர் தங்க பிஸ்கெட் வாங்க வந்த சண்முகத்தை உசிலம்பட்டி போலீஸ் நிலையம் வரும்படி கூறிவிட்டு உடனிருந்த சங்கரலிங்கம், மோசடியில் ஈடுபட்ட சிலரை தங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.
ரூ.5 லட்சம் மோசடி
இந்த நிலையில் சண்முகம் உசிலம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு இது குறித்து போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் இது சம்பந்தமாக போலீசார் யாரும் வரவில்லை என்று கூறியதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த சண்முகம் ரூ.5 லட்சம் மோசடி குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.