மின்னல் தாக்கி பெண் பலி

நெல்லை அருகே மின்னல் தாக்கில் பெண் பலியானார்.

Update: 2022-04-02 20:30 GMT
நெல்லை:

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த மேலக்கோட்டை கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி வள்ளி தாய் (வயது 45). இவர் நேற்று வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்க்க அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். நேற்று மாலை அந்த பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. 

அப்போது எதிர்பாராத விதமாக வள்ளிதாய் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வள்ளிதாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்