பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
குன்னம்:
குன்னம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஏட்டு மருதமுத்து ஆகியோர் பேசினர். கூட்டத்தில், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மையம் குறித்தும், அதனுடைய இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.