வயலில் தூங்கிய விவசாயி கிணற்றில் தவறி விழுந்து சாவு

வயலில் தூங்கிய விவசாயி கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

Update: 2022-04-02 20:24 GMT
மங்களமேடு:

விவசாயி
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 48). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது வயலில் கட்டிலில் தூங்கினார். நள்ளிரவில் எழுந்த அவர் தடுமாறி அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
நேற்று காலை இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி, சத்தியமூர்த்தியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து சத்தியமூர்த்தியின் தந்தை பழனிமுத்து கொடுத்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்