அம்பை பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
அம்பை பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
அம்பை:
அம்பை பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு நேரம் நீடித்த மழையால் நகராட்சி அலுவலக வளாகத்தில் நின்ற மரம் சாய்ந்தது. பெரியகுளம் வடக்கு தெருவில் நின்ற மரமும் சரிந்து, அங்குள்ள உயரழுத்த மின்கம்பியில் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
உடனே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று, மின் இணைப்புகளை துண்டித்து, சரிந்த மரங்களை அகற்றி, மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் இரவில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது.
இதேபோன்று கல்லிடைக்குறிச்சி பகுதியில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்ததில் மின்தடை ஏற்பட்டது.