கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2022-04-02 20:19 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தில் மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் உத்தரவின்பேரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கூத்தூர் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். இம்முகாமில் 350 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இம்முகாமில் கால்நடை ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்