தங்க கேடயத்தில் ேதவியருடன் அருள்பாலித்த பக்தோசித பெருமாள்

தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி சோளிங்கரில் தங்க கேடயத்தில் தேவியருடன் பக்தோசித பெருமாள் அருள்பாலித்தார்.

Update: 2022-04-02 20:00 GMT
சோளிங்கர்

தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி சோளிங்கரில் தங்க கேடயத்தில் தேவியருடன் பக்தோசித பெருமாள் அருள்பாலித்தார்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சாமி திருக்கோவில் தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமிக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது இதைத்தொடர்ந்து மாலை பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தங்க கேடயத்தில் எழுந்தருளி காட்சி தந்து அருள் பாலித்தார்.

பின்னர் சன்னதி தெரு, சுப்பாராவ் தெரு, பைராகி மடம் வீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு ஆகிய நான்கு மாடவீதியில் மங்கள வாத்தியங்களுடன் சாமி வீதி உலா சென்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் மூலவர் சன்னதியின் முன் இந்த ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்