அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது
சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் சக்திகணேசன் மற்றும் வருவாய்த்துறையினர் மம்சாபுரம்-நதிக்குடி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உரிய அனுமதியின்றி பர்மா காலனியை சேர்ந்த முனியசாமி மகன் சரவணன் (வயது 47) என்பவர் பட்டாசுகளை தயாரித்துக்கொண்டு இருந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.