கார் கவிழ்ந்த விபத்தில் புதுமாப்பிள்ைள பலி

வாடிப்பட்டி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார். இந்த விபத்தில் மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-04-02 19:50 GMT
வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார். இந்த விபத்தில் மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுமாப்பிள்ளை

ேகாவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் தாமோதரன் (வயது 27).இவரது மனைவி சுமதி (27). இருவருக்கும் திருமணம் நடந்து 6 மாதமாகிறது.கணவன்-மனைவி இருவரும் பெங்களுருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். 
இந்த நிலையில் நேற்று காலை தூத்துக்குடி மணியஞ்சிபூவாணி கிராமத்தில் உள்ள உறவினர் இல்ல விழாவிற்கு செல்வதற்கு கோவையில் இருந்து காரில் புறப்பட்டனர். அந்த காரை தாமோதரன் ஓட்டி வந்தார். காரில் அவரது மனைவி சுமதி, மாமனார் செல்வராஜ் (55), மாமியார் இந்திரா (50) ஆகியோர் உடன் இருந்தனர்.

கார் கவிழ்ந்தது

அந்த கார் வாடிப்பட்டி அருகே பழனியாண்டவர் கோவில் பிரிவில் திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் சென்றது. அப்ேபாது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையில் உள்ள மையத்தடுப்பு சுவர் மீது ஏறி எதிர் திசையில் மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற வேன் மீது மோதி கார் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திேலயே தாமோதரன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்ைசக்காக  மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்