2-வது திருமணம் செய்தவர் கைது

2-வது திருமணம் செய்தவர் கைது

Update: 2022-04-02 19:45 GMT
லால்குடி, ஏப்.3-
லால்குடி அருகே உள்ள மணக்கால் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 37). இவரது மனைவி ஜோதிமணி. இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சுதாகர் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த ஜோதிமணி 2019-ம் ஆண்டு லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சுதாகர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று சுதாகரை போலீசார் கைது செய்து லால்குடி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்