மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-04-02 19:35 GMT
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கியது. முன்னதாக பால், பன்னீர், இளநீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் நாகப்பன், செயலாளர் சமுத்திரம், பொருளாளர் குமார் மற்றும் விழா கமிட்டியார் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்