கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-02 19:34 GMT
மலைக்கோட்டை, ஏப்.3-
திருச்சி கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், நாகராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் இ.பி.சாலை பகுதியில் நேற்று காலை ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவதானம் சந்திப்பில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த கீழதேவதானம் வீரமுத்துநகரை சேர்ந்த கிளமெண்ட் (வயது 32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசவே, அவரை சோதனை செய்த போது, அவர் பேண்ட் பாக்கெட்டில் சிறிய பிளாஸ்டிக் பையில் 200 கிராம் கஞ்சா வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்