திருவானைக்காவல்ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-04-02 19:31 GMT
ஸ்ரீரங்கம்,ஏப்.3-
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம்  நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிரமோற்சவ விழா
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரமோற்சவ விழா 48 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழாகடந்தமாதம்(மார்ச்)11-ந்தேதிபெரியகொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழா வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தேரோட்டம்
அதனைத் தொடர்ந்து மகர லக்னத்தில் காலை 4.30 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேர் நிலையம் வந்தடைந்ததும், காலை 6.30 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேர் மேலஉள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய 4 பிரகாரங்களில் வலம் வந்தது. பின்னர் தேர் காலை 8.25 மணிக்கு மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது.
பின்னர் காலை 8.30 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் பகல் 1 மணிக்கு சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறியசப்பரத்தில்வந்துஅருள்பாலித்தார்.
வாண வேடிக்கை
மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் பகல் 1 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு பகல் 1.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் மதியம் 2.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டின் போது கோவில்யானைஅகிலாதேருக்குமுன்செல்லமேளதாளம், சங்கொலி முழங்க வாணவேடிக்கையுடன் சிவ, சிவ, ஓம் சக்தி என்ற பக்தி முழக்கத்திற்கு நடுவே உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்குஅருள்பாலித்தனர்.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.மேலும்வியாபாரிகள்தண்ணீர்பந்தல், அன்னதானம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், கோவில் பண்டிதர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்