சாதி பெயரை கூறி பள்ளி மாணவனை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
சாதி பெயரை கூறி பள்ளி மாணவனை தாக்கிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குளித்தலை,
குளித்தலை அரசு பள்ளி மாணவர்கள் சிலர் பஸ்சில் பயணம் செய்த போது அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை சாதி பெயரை கூறி கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பஸ்சில் பயணம் செய்த ஒரு மாணவனை சக மாணவர்கள் சாதி பெயரை கூறி திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அந்த மாணவன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அந்த மாணவன் அளித்த புகாரின் பேரில் அதே பள்ளியை சேர்ந்த 9 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.