போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு

இந்திய சுதந்திர வரலாறு தொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்ற பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-04-02 19:09 GMT
வேலூர்

வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வேலூர் பெரியார் பூங்காவில் கடந்த 26-ந் தேதி சுதந்திர பெருவிழா தொடங்கியது.

 இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு மற்றும் சமூக நலத்துறை, வேளாண் வளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
இதன் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் தப்பாட்டம், பறை இசை மற்றும் சிலம்பாட்டம், வாள் சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. 

பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்கள் குறித்து நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், சிறப்பாக செயல்பட்ட அரசு அலுவலர்களுக்கும் பரிசுகளும், பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்