திருடு, மாயமான 61 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
திருடு, மாயமான 61 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் திருடப்பட்ட செல்போன்கள் மற்றும் பொதுமக்கள் தவற விட்ட செல்போன்கள் என மொத்தம் 61 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். இதையடுத்து மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
இதில் போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், சுப்புராயன், மாவட்ட குற்ற ஆவணகாப்பக பிரிவு துணை சூப்பிரண்டு சுரேஷ், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.