காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் ஆய்வு

இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து பேரூராட்சி நிர்வாக செயற்பொறியாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர்;

Update: 2022-04-02 18:58 GMT
இளையான்குடி, 
இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து பேரூராட்சி நிர்வாக செயற்பொறியாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர். இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் தலைமையில் காவிரி கூட்டுக் குடிநீர் முறைப்படுத்தவும், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர், குடிநீர் வினியோகம் பணியாளர்கள் ஆகியோர் கூட்டாக நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆய்வுகளை செய்தனர். அப்போது குடிநீர் வழங்குவதை முறைப்படுத்தவும், நீர்த்தேக்க தொட்டிகள் இல்லாத இடங்களில் புதிய மேல்நிலை தொட்டிகள் அமைப்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. குடிநீர் குழாய்களில் ஏற்படும் பழுதுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வறிக்கையை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் காவிரி கூட்டுக் குடிநீர் சம்பந்தமான பணிகளுக்கு நல்ல தீர்வு எட்டப்படும் என இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கூறினார்.

மேலும் செய்திகள்