சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணி செய்த கலெக்டர்

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்;

Update:2022-04-03 00:27 IST
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை செய்யும் திட்டத்தின் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி மருத்துவமனையில் தூய்மை செய்யும் பணியை தொடங்கி வைத்தார். கலெக்டர் அவரே தரையை துடைத்து சுத்தம் செய்தார். இதை தொடர்ந்து மருத்துவமனை டீன் ரேவதி, மருத்துவ அலுவலர் முகமதுரபி, டாக்டர்கள் வித்யாஸ்ரீ, கங்கலெட்சுமி மற்றும் டாக்டர்கள் மருத்துவமனை பணியாளர்களுடன் சேர்ந்து மருத்துவமனை வளாகத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக கலெக்டர் கூறும்போது, மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி,  அரசு மருத்துவமனைகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். 
மருத்துவகல்லுாரி டீன் ரேவதி கூறும்போது ,இந்த பணி ஒரு மாதத்திற்கு நடக்கும். இதையொட்டி மருத்துவமனை மற்றும் வெளி பகுதி, வளாக சுற்று பகுதிகளை தூய்மையாக வைக்க பணி நடைபெறும் என்றார்.

மேலும் செய்திகள்