சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிப்பு
கிருஷ்ணராயபுரத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு மஞ்சமேடு மணி நகரில் தனி நபர் ஒருவர் சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியிருந்தார். அதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் யசோதா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நில அளவை செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் கட்டப்பட்டு இருந்த சுற்றுச்சுவரை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.