கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன போராட்டம்
விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி கும்பகோணத்தில் நூதன போராட்டம் நடந்தது.
கும்பகோணம்:-
விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி கும்பகோணத்தில் நூதன போராட்டம் நடந்தது.
நூதன போராட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதை கண்டித்தும், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கும் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கும்பகோணத்தில் கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன போராட்டம் நட ந்தது.
இதில் பெண்கள் கியாஸ் சிலிண்டரை பாடையில் கட்டி மாலை அணிவித்து சுமந்து சென்றனர்.
கயிறு கட்டி இழுத்து...
இதேபோல் சி.ஐ.டி.யூ. சார்பில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை கயிறு கட்டி இழுத்துவரும் நூதன போராட்டமும் நடைபெற்றது. அப்போது கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவிலில் இருந்து ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை கயிறு கட்டி இழுத்து ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கும்பகோணம் மாநகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, மாநகர உறுப்பினர் செல்வம், மாதர் சங்க பொறுப்பாளர்கள் தனலட்சுமி, சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.