பேரூராட்சி மன்ற கூட்டம்

அரகண்டநல்லூரில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-02 18:49 GMT
திருக்கோவிலூர், 
அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடந்தது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கதீஜாபீ முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் முருகன் வரவேற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்து பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு கூறுகையில்,  கோரிக்கைகளை அனைத்தையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் செலவில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

மேலும் செய்திகள்