கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு

வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-02 18:46 GMT
வேலூர்

வேலூர் வள்ளலாரை சேர்ந்தவர் ஜாபர் (வயது 20). இவர் நேற்று காலை வள்ளலார் டபுள்ரோடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி ஜாபர் வைத்திருந்த ரூ.1,000-ஐ பறித்து மிரட்டல் விடுத்து சென்றனர். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், வேலூர் சத்துவாச்சாரி காந்திநகரை சேர்ந்த ஆனந்தன் என்கிற அந்தோணி (25), ஜெய்சூர்யா (22) ஆகியோர் ஜாபரிடம் பணம் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்