10 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

அரசு பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்திய தேனி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-02 18:45 GMT
வேலூர்

அரசு பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்திய தேனி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா கடத்தல்

ஆந்திராவில் இருந்து வேலூர் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று அதிகாலை காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த பஸ் உள்ளிட்ட வாகனங்களில் மோப்பநாய் சிம்பா உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது திருப்பதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பஸ்சில் போலீசார் சோதனையிட்டனர். அதில் ஒருவர் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. 

அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜா (வயது 50) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சிறப்பு பயிற்சி

எங்கிருந்து யாருக்கு கஞ்சா கடத்தப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி ஆந்திர போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ஆந்திராவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதைதடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் மோப்பநாய் பிரிவில் உள்ள சிம்பா என்ற நாய்க்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 45 நாட்கள் வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சியின் அடிப்படையில் போலீசார் சிம்பா உதவியுடன் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்