பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் ஆர்்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டைதெரு, ஆலமர பகுதி மற்றும் ஹவுசிங் போர்டு காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளர் ஏ.ஆர்.ரகுமான் தலைமை தாங்கினார். நகர செயலாளர் காசி வரவேற்றார், ஞானசேகரன், கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட குழு உறுப்பினர் ஜாபர் சாதிக் தொடங்கி வைத்து பேசினார்
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் இருசக்கர வாகனங்கள், கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோதி, ஏகாம்பரம், உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.