டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-02 19:00 GMT
கும்பகோணம்:-

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின் போது பெண் இறந்தது தொடர்பாக பணியில் இருந்த டாக்டர் அர்ச்சனா சர்மா என்பவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக டாக்டர் அர்ச்சனா சர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் நோயாளிகளின் இறப்புக்கு டாக்டர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்வதை கண்டித்தும், டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் கும்பகோணத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ கழக கும்பகோணம் கிளைதலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர்கள் நாகராஜன், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செயலாளர் முத்தையா செல்வகுமார், பொருளாளர் ராஜசேகர், செயற்குழு உறுப்பினர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்