கீரமங்கலம் பகுதியில் மழை; கடலை விவசாயிகள் மகிழ்ச்சி
கீரமங்கலம் பகுதியில் மழை; கடலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.;
கீரமங்கலம்:
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வெயிலால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் இன்று மதியம் சுமார் 1 மணி நேரம் விடாமல் கனமழை பெய்தது. மேலும் கடலை அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தண்ணீர் பாய்ச்சி அறுவடை செய்ய முடியாமல் தவித்த விவசாயிகள் இந்த மழையை பயன்படுத்தி அறுவடை செய்துவிடலாம் என்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.