நார் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் எரிந்து நாசம்

நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-04-02 18:18 GMT
ஆலங்குடி:
ஆலங்குடியை சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கு சொந்தமாக நார் தொழிற்சாலை ஆலங்குடி அடுத்த அண்ணா நகரில் உள்ளது. இந்நிலையில், இன்று மதியம் தேங்காய் நார்கள் மற்றும் மஞ்சுகள் திடீரென தீ பற்றி எரிந்தன இதையறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் மற்றும் மஞ்சுகள் தீயில் எரிந்து நாசமாயின.

மேலும் செய்திகள்